மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஜெயவர்தனே விலகல்!

Mumbai Indians Coaching Change: மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து மஹேலா ஜெயவர்தனே விலகியுள்ளார்.

Published on: October 17, 2026 at 9:28 pm

மும்பை, அக்.17, 2026: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேலா ஜெயவர்தனே விலகியுள்ளார். இதனை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் 2026 அக்டோபர் 17ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜெயவர்தனே கடந்த 2017 முதல் 2022 வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றினார். அப்போது 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் அந்த அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கியப் பங்காற்றினார். பின்னர், 2025 சீசனுக்கு முன்னதாக மீண்டும் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார்.

அவரது இரண்டாவது பதவிக்காலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 2025ஆம் ஆண்டு நான்காவது இடத்தையும், 2026ஆம் ஆண்டு ஒன்பதாவது இடத்தையும் பிடித்தது. இதையடுத்து, புதிய ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக அவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அணியின் உரிமையாளர்களான நீதா அம்பானி, ஆகாஷ் அம்பானி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்த ஜெயவர்தனே, மும்பை இந்தியன்ஸ் அணியின் எதிர்கால வெற்றிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஸ்மிருதி மந்தனா கேப்டன்சி எப்படி இருக்கும்? ஹர்மன்பிரீத் பாணியிலிருந்து மாறுபடுமா?

ஜென்ஸி தலைமுறையிலும் தமிழ் வளர்கிறது.. டெல்லி கம்பன் கழகக் கருத்தரங்கில் தமிழறிஞர்கள் கருத்து!
Tamil Growth Among Gen Z

ஜென்ஸி தலைமுறையிலும் தமிழ் வளர்கிறது.. டெல்லி கம்பன் கழகக் கருத்தரங்கில் தமிழறிஞர்கள் கருத்து!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com