தீபாவளி 2026.. திரைக்கு வரும் தமிழ் திரைப்படங்கள்.. முழுப் பட்டியல்!

Diwali 2026 Tamil Movie Releases: 2026 தீபாவளிக்கு திரைக்கு வரும் தமிழ் திரைப்படங்களின் முழுப் பட்டியலை பார்க்கலாம்.

Published on: October 18, 2026 at 12:13 pm

சென்னை, அக்.18, 2026: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்த ஆண்டு தமிழ் திரையுலகில் நான்கு திரைப்படங்கள் வெளியாகத் தயாராகி வருகின்றன. முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் இந்தத் தீபாவளி வெளியீட்டுப் பட்டியலில் இல்லாதபோதும், மாறுபட்ட கதைக்களங்களைக் கொண்ட படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

நயன்தாரா நடிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உள்ளது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இப்படம், தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் எம். மாறன் இயக்கியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம் தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்டு ஆக்‌ஷன், உணர்ச்சி மற்றும் குடும்பப் பாசம் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ளது. பிரபுதேவா நடிப்பில் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கியுள்ள ‘மூன் வாக்’ திரைப்படமும் தீபாவளி வெளியீட்டுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதனுடன், ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடித்துள்ள இந்தி இதிகாசத் திரைப்படமான ‘ராமாயணா’ படமும் நவம்பர் 5-ம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படங்கள் நவம்பர் 5 மற்றும் 6-ம் தேதிகளில் திரைக்கு வர உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படங்களின் வசூல் போட்டியில் எந்தத் திரைப்படம் வெற்றி பெறும் என்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : லதா ரெட்டி ஆக நடிக்கும் கீர்த்தி சுரேஷ். ஊட்டியில் படப்பிடிப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com