ஓமன் கடற்பகுதியில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்.. இந்திய மாலுமி உயிரிழப்பு!

Oman Ship Attack: ஓமன் கடற்பகுதியில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார்; 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

Published on: November 3, 2026 at 2:38 pm

மஸ்கட், நவ.3, 2026: ஓமன் கடற்கரை அருகே சென்று கொண்டிருந்த இந்தியக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் மீது அடையாளம் தெரியாத வான்வழிப் பொருள் தாக்குதல் நடத்தியுள்ளது. நவம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற இந்தத் தாக்குதலில் கப்பலில் இருந்த இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் உறுதிப்படுத்தியுள்ளார்.

‘அல் ஜுசூஃபி’ (MSV Al Jusufi) என்ற அந்தக் கப்பலில் மொத்தம் 14 இந்திய மாலுமிகள் இருந்துள்ளனர். தாக்குதலைத் தொடர்ந்து கப்பலில் இருந்த 13 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, ஓமன் கடலோரக் காவல்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்த மற்றொரு மாலுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கந்தர் நஹிம் அஜிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது மறைவுக்கு மத்திய அமைச்சர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவரின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, மீட்கப்பட்ட 13 மாலுமிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும், அவர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வரவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும், ஓமனில் உள்ள இந்தியத் தூதரகமும் அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமன் கடற்பகுதியில் தொடரும் தாக்குதல்கள் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளன.

இதையும் படிங்க : விமானத்தில் சக விமானி தாக்குதல்.. உயிரைப் பணயம் வைத்து 170 பேரைக் காப்பாற்றிய இந்திய விமானிக்கு ஐக்கிய அரபு அமீரகம் விருது!

விமானத்தில் சக விமானி தாக்குதல்.. உயிரைப் பணயம் வைத்து 170 பேரைக் காப்பாற்றிய இந்திய விமானிக்கு ஐக்கிய அரபு அமீரகம் விருது!
Indian Pilot Honoured by UAE

விமானத்தில் சக விமானி தாக்குதல்.. உயிரைப் பணயம் வைத்து 170 பேரைக் காப்பாற்றிய

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com