2030 ஆண்டுக்கு முன்பே பூமி வெப்பமாகும்.. விஞ்ஞானிகள் ஆய்வில் அதிர்ச்சி!

Global Warming Is Accelerating: பூமி வெப்பமயமாதல் வேகம் அதிகரித்து வருவது விஞ்ஞானிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Published on: November 3, 2026 at 3:38 pm

சென்னை, நவ.3, 2026: புவி வெப்பமயமாதல் முன்பைவிட வேகமாக அதிகரித்து வருவதாக புதிய ஆய்வில் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த 1970 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில், பத்தாண்டுக்கு சுமார் 0.2 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் உயர்ந்த உலக வெப்பநிலை, 2015-க்குப் பிறகு பத்தாண்டுக்கு சுமார் 0.35 டிகிரி செல்சியஸாக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல் நினோ தாக்கம், எரிமலை வெடிப்புகள் மற்றும் சூரிய கதிர்வீச்சில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற இயற்கைக் காரணிகளின் தாக்கத்தைக் கணக்கில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாசா, நொயா உள்ளிட்ட ஐந்து முக்கிய உலக வெப்பநிலைத் தரவுகளையும் ஆய்வாளர்கள் ஒப்பிட்டுள்ளனர். இதன் மூலம், வெப்பமயமாதல் வேகம் அதிகரித்திருப்பதற்கு 98 சதவீதத்துக்கும் அதிகமான புள்ளிவிவர உறுதி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த வேகம் தொடர்ந்து நீடித்தால், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரம்பை 2030-ஆம் ஆண்டுக்கு முன்பே பூமி எட்டக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

எனவே, புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து, கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அணு கடிகாரம்.. திருப்பதியில் இஸ்ரோ தலைவர் சொன்ன பிரத்யேக தகவல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com