Narayanan: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் தரிசனம் செய்தார். அப்போது, அக்டோபர் 30-ல் என்.வி.எஸ்.-03 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது எனத் தெரிவித்தார்.
Narayanan: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் தரிசனம் செய்தார். அப்போது, அக்டோபர் 30-ல் என்.வி.எஸ்.-03 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது எனத் தெரிவித்தார்.

Published on: October 29, 2026 at 5:40 pm
திருப்பதி, அக்.29, 2026: ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவின் வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டத்தில் அடுத்த முக்கிய நடவடிக்கையாக, என்.வி.எஸ்.-03 (NVS-03) வழிகாட்டி செயற்கைக்கோள் அக்டோபர் 30ஆம் தேதி இரவு 11.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளதாகத் தெரிவித்தார். இந்தச் செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி.-எஃப்12 (GSLV-F12) ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த என்.வி.எஸ்.-03 செயற்கைக்கோள், இந்தியாவின் சொந்த வழிகாட்டி அமைப்பான நாவிக் (NavIC) சேவையை வலுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அணுக் கடிகாரம் இடம்பெறுகிறது. மேலும், எல்1 அலைவரிசை உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் இந்திய நிலப்பரப்பு முழுவதும் மற்றும் நாட்டின் எல்லையைச் சுற்றியுள்ள சுமார் 1,500 கிலோமீட்டர் வரையிலான பகுதிகளிலும் வழிகாட்டிச் சேவைகளை வழங்க முடியும்.
VIDEO | Andhra Pradesh: ISRO Chairman visits Tirumala Venkateswara Temple. He says, "On 30th October 11:51 p.m., with the guidance of Prime Minister of India, we are going to launch NVS-03 navigation satellite 03 using our GSLV-F12 launch vehicle. This is the fifth mission in this year, including a private launch we accomplished this year. And with this satellite, right now we are having three navigation satellite in the orbit, successfully working. In this satellite, we are going to have one indigenous atomic clock to be used. And with this satellite, we’ll have four satellites which will provide position, navigation, and timing services for India for multiple purposes including strategic application, locating and monitoring train in real-time movement, monitoring the vehicle movement, monitoring the boat and ship movement. 50 years back, when our fisherman used to go for fishing, they used to see the stars and move. Today, technology has grown to greater level, and India has grown to greater level and we are going to have our navigation service for the common man of our country." (Full video available on PTI Videos – https://t.co/bIyFWTfmBd)
— Press Trust of India (@PTI_News) October 29, 2026
(நன்றி: பி.டி.ஐ)
இந்தச் செயற்கைக்கோள் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் ரயில்களின் நிகழ்நேர நகர்வைக் கண்காணித்தல், வாகனங்களின் இருப்பிடத்தைக் கண்டறிதல், படகுகள் மற்றும் கப்பல்களின் நகர்வைக் கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மேம்படும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்தார். குறிப்பாக, மீனவர்கள் கடலில் பயணிக்கும்போது தங்களின் இருப்பிடத்தை அறிந்துகொள்ளவும், பாதுகாப்பு மற்றும் ராணுவம் சார்ந்த பயன்பாடுகளுக்கும் இந்த வழிகாட்டித் தொழில்நுட்பம் உதவும். முன்பு மீனவர்கள் நட்சத்திரங்களைப் பார்த்து கடலில் பயணித்த நிலை மாறி, தற்போது நவீனத் தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
அதன்படி, இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, என்.வி.எஸ்.-03 செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி.-எஃப்18 (GSLV-F18) ராக்கெட் மூலம் அக்டோபர் 30ஆம் தேதி இரவு 11.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட உள்ளது. இது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வரிசையின் 20-வது பயணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ரூ.20,000-க்குள் 5 சிறந்த ஸ்மார்ட் டிவிகள்.. வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com