Modi Slams Opposition: நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அவப்பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள் என எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
Modi Slams Opposition: நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அவப்பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள் என எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Published on: October 31, 2026 at 1:44 pm
ஆமதாபாத், அக்.31, 2026: குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, ரூ.14 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், எதிர்க்கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
நாட்டில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி, பிரதமர் மோடிக்கு அவப்பெயர் உண்டாக்க முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார். நாடு நெருக்கடியைச் சந்திக்கும்போது சிலர் மகிழ்ச்சியடைவதாகவும், மேற்கு ஆசியப் போர் சூழலைப் பயன்படுத்தி உரம் தட்டுப்பாடு ஏற்படும், சமையல் எரிவாயு கிடைக்காது எனப் பொதுமக்களிடையே வதந்திகளைப் பரப்பியதாகவும் தெரிவித்தார்.
உலகளவில் உரங்களின் விலை அதிகரித்துள்ள போதிலும், இந்திய விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக மோடி கூறினார். சர்வதேச சந்தையில் 3,000 ரூபாய்க்கு விற்கப்படும் யூரியா உர மூட்டையை இந்திய விவசாயிகள் 300 ரூபாய்க்கும் குறைவான விலையில் பெறுவதாகவும், டிஏபி உரம் 1,350 ரூபாய்க்கு வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேர்தல் ஆணையம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க பாஜக தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டலாம் என்றும், எதிர்க்கட்சிகள் விவாதத்திற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் சவால் விடுத்தார்.
மேலும், தனது வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை நாட்டு மக்களுக்குச் சேவை செய்வேன் என பிரதமர் மோடி உறுதியளித்தார். முன்னதாக, அவரது வாகனப் பேரணியின்போது ‘மோடி எங்கும் செல்ல மாட்டார்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தொண்டர்கள் ஏந்தியிருந்தனர்.
இதையும் படிங்க : மகாராஷ்டிரா எம்.எல்.சி தேர்தல்.. நாக்பூரில் காங்கிரஸ் வெற்றி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com