கைது செய்யப்பட்டவரை 24 மணி நேரத்திற்குள் ஆஜர்படுத்த வேண்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Supreme Court: கைது செய்யப்பட்டவரை 24 மணி நேரத்திற்குள் ஆஜர்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published on: November 6, 2026 at 12:50 pm

புதுடெல்லி, நவ.6, 2026: கைது செய்யப்பட்ட ஒருவரை 24 மணி நேரத்திற்குள் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்த வேண்டும் என்ற காலக்கெடு, காவல்துறை முறையாகக் கைது செய்த நேரத்தில் இருந்து அல்லாமல், முதலில் காவலில் வைத்த நேரத்தில் இருந்தே கணக்கிடப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 22(2)-வது பிரிவின்படி, ஒருவரின் சுதந்திரம் பறிக்கப்பட்டு காவலில் வைக்கப்படும் நேரத்தில் இருந்தே 24 மணி நேரக் கணக்கீடு தொடங்கும் என நீதிபதிகள் உஜ்ஜல் புயான், அதுல் எஸ். சந்துர்கர் அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், காவலில் வைத்த இடத்திலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லத் தேவையான பயண நேரத்தைத் தவிர, விசாரணை, சோதனை, பறிமுதல் உள்ளிட்ட எந்தக் காரணத்திற்காகவும் 24 மணி நேரக் கணக்கீட்டில் விலக்கு அளிக்க முடியாது. 24 மணி நேரத்தைக் கடந்தும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது, ஒருவர் காவலில் வைக்கப்பட்ட உண்மையான தேதி மற்றும் நேரத்தை நீதித்துறை நடுவர்கள் பதிவு செய்ய வேண்டும். மேலும், காவல் காலம் நியாயமானதாக உள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். தேவையற்ற நீண்ட காவல் இருந்தால், ஜாமீன் அல்லது காவல் நீட்டிப்பு தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு ரிமாண்ட் வழங்க மறுக்கவும் அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : திருமணம், உடல் நலக்குறைவு.. ராகுல் காந்தி போராட்டத்தை மிஸ் செய்த 60 இளைஞர் காங்கிரஸார்!

மம்தா பானர்ஜியை சந்தித்தார் அபிஜீத் தீப்கே.. இந்தியா கூட்டணி பேரணியில் பங்கேற்க சி.ஜே.பி மறுப்பு!
Abhijeet Dipke

மம்தா பானர்ஜியை சந்தித்தார் அபிஜீத் தீப்கே.. இந்தியா கூட்டணி பேரணியில் பங்கேற்க சி.ஜே.பி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com