டிசம்பரில் தாயகம் திரும்புவேன்; மரணத்திற்கும் அஞ்சமாட்டேன்.. ஷேக் ஹசீனா!

Sheikh Hasina: டிசம்பரில் தாயகம் திரும்புவேன்; மரணத்திற்கும் அஞ்சமாட்டேன் என ஷேக் ஹசீனா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

Published on: November 6, 2026 at 12:45 pm

புதுடெல்லி, நவ.6, 2026: வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, வரும் டிசம்பர் மாதம் எப்படியாவது வங்கதேசத்திற்குத் திரும்புவேன் என உறுதிபடத் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு மாணவர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட அவர், தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்து வசித்து வருகிறார்.

2024ஆம் ஆண்டு போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டதாகக் கூறி, 2025ஆம் ஆண்டு வங்கதேச சிறப்பு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஹசீனா, நீதிமன்றத் தீர்ப்பையும் நிராகரித்துள்ளார்.

தாயகம் திரும்பினால் கைது செய்யப்படலாம், சிறையில் அடைக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்பதை அறிந்தே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், மரணம் தனது விதியாக இருந்தாலும், சொந்த நாட்டு மக்களுடன் மண்ணிலேயே உயிரிழக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, ஹசீனாவை நாடு கடத்துமாறு இந்தியாவிடம் வங்கதேச அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. அவரது அவாமி லீக் கட்சிக்கும் வங்கதேசத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் சூழல் சவாலாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியினர் யார் யார்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com