புற்றுநோய் மருந்துகளின் விலை 70% வரை குறைப்பு.. நவ.9 முதல் புதிய விலை அமல்!

Cancer Drug Price Cut: புற்றுநோய் மருந்துகளின் விலை 70% வரை குறைக்கப்பட உள்ளது; நவ.9 முதல் புதிய விலை அமலாகிறது.

Published on: November 5, 2026 at 3:06 pm

புதுடெல்லி, நவ.5, 2026: புற்றுநோய்க்கான சிகிச்சைச் செலவைக் குறைக்கும் நோக்கில், 137 வகையான புற்றுநோய் மருந்துகளின் வர்த்தக லாப வரம்பை 30 சதவீதமாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் சில மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை (MRP) 20 முதல் 70 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA), இந்த 137 மருந்துகளின் கீழ் வரும் 543 பிராண்டுகளுக்கான திருத்தப்பட்ட விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. புதிய விலைகள் வரும் நவம்பர் 9ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இதன் மூலம் புற்றுநோய் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.2,500 கோடி வரை செலவு மிச்சமாகும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

சில மருந்துகளின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, தியோடெபா (Thiotepa) மருந்தின் 100 மில்லி கிராம் குப்பியின் விலை ரூ.80,071லிருந்து ரூ.7,150 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. பெர்டூசுமாப் (Pertuzumab) மருந்தின் விலை ரூ.94,951லிருந்து ரூ.30,593 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில மருந்துகளின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

குறிப்பாக, காப்புரிமை பெற்ற சில முக்கிய மருந்துகளின் விலைகள் குறையாமல் அதே நிலையில் தொடர்கின்றன. நுரையீரல் மற்றும் மார்பகப் புற்றுநோய் உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்தப்படும் பெம்ப்ரோலிசுமாப் (Keytruda) மருந்தின் விலை 100 மில்லி கிராமுக்கு ரூ.2.16 லட்சமாகவே உள்ளது. எனவே, இந்த நடவடிக்கை சில மருந்துகளின் விலையைக் குறைத்தாலும், காப்புரிமை பெற்ற உயர் விலை மருந்துகளை மலிவாக்க மேலும் நடவடிக்கைகள் தேவை என மருத்துவத் துறை வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : உறவுகளுக்கு இடையே விரிசலை ஏற்படுத்தும் பழக்கம்.. செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

உறவுகளுக்கு இடையே விரிசலை ஏற்படுத்தும் பழக்கம்.. செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
Phubbing and Relationship Problems

உறவுகளுக்கு இடையே விரிசலை ஏற்படுத்தும் பழக்கம்.. செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

காசநோய் மருந்து காப்புரிமை விண்ணப்பம் நிராகரிப்பு.. மலிவு விலையில் மருந்துகள் கிடைக்க வாய்ப்பு!
TB Drug Patent Rejection

காசநோய் மருந்து காப்புரிமை விண்ணப்பம் நிராகரிப்பு.. மலிவு விலையில் மருந்துகள் கிடைக்க வாய்ப்பு!

வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு ரூ.150 குறைந்தபட்ச ஊதியம்.. பாதுகாப்புச் சட்டம் கொண்டுவர கோரிக்கை!
Tamil Nadu Domestic Workers Minimum Wage

வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு ரூ.150 குறைந்தபட்ச ஊதியம்.. பாதுகாப்புச் சட்டம் கொண்டுவர கோரிக்கை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com