Keerthy Suresh: காதலர் ஆண்டனி உடனான காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
Keerthy Suresh: காதலர் ஆண்டனி உடனான காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Published on: November 5, 2026 at 2:26 pm
Updated on: November 5, 2026 at 2:27 pm
திருவனந்தபுரம், நவ.5, 2026: நடிகை கீர்த்தி சுரேஷ், தனது கணவர் ஆண்டனி தட்டிலுடனான 15 ஆண்டுகால காதல் வாழ்க்கை குறித்துப் பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார். பிளஸ் 2 படிப்பை முடித்த பிறகு, தனது 17 வயதில் ஆண்டனியுடன் காதல் தொடங்கியதாகவும், அப்போது அவர் தன்னைவிட ஏழு வயது மூத்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, தனது தாயார் மேனகா, தன்னுடைய டைரியைப் படித்ததன் மூலம் காதல் விவகாரத்தைக் கண்டுபிடித்ததாகக் கீர்த்தி கூறியுள்ளார். அந்த டைரியில் காதல் குறித்த அனைத்து விஷயங்களையும் எழுதி வைத்திருந்ததாகவும், அதன் பிறகு டைரி எழுதுவதையே நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆண்டனி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், இருவரின் காதலுக்கு வீட்டில் சில பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும், குடும்பத்தினரைச் சம்மதிக்க வைக்கக் காலம் எடுத்துக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருவரும் 2009 டிசம்பரில் சந்தித்ததாகவும், 2010 ஜனவரியில் காதலைத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
சுமார் 15 ஆண்டுகள் காதலித்த இருவரும், கடந்த 2024 டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் தமிழ் பிராமணர் மற்றும் மலையாள கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். திருமணம் அறிவிக்கப்பட்ட பிறகு, ஊடகங்களின் கவனம் மற்றும் புகைப்படக் கலைஞர்களின் கண்காணிப்பு குறித்து ஆண்டனி அதிக பதற்றமடைந்ததாகவும் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க : நாகார்ஜுனாவின் ‘கிங்100’ தபு கதாபாத்திரம் அறிமுகம்.. பிறந்தநாளில் வெளியான ஃபர்ஸ்ட் லுக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com