Scene Box Office Collection: நடிகர் சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம் முதல் நாளில் ரூ.34 கோடி வசூலித்துள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Scene Box Office Collection: நடிகர் சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம் முதல் நாளில் ரூ.34 கோடி வசூலித்துள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published on: November 8, 2026 at 1:22 pm
சென்னை, நவ.8, 2026: நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘சீன்’ திரைப்படம், முதல் நாளிலேயே உலகளவில் ரூ.34.25 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 2026ஆம் ஆண்டில் சூர்யா நடித்த மூன்றாவது திரைப்படமான இது, அவரது இந்த ஆண்டின் அதிகபட்ச தொடக்க நாள் வசூலைப் பெற்ற படமாக உருவெடுத்துள்ளது.
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், கிரைம் காமெடி கதைக்களத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூ.19.15 கோடி நிகர வசூலைப் பெற்றுள்ளதாக வர்த்தகத் தகவல்களை வெளியிடும் சாக்னிலிக் தெரிவித்துள்ளது.
இதில் தமிழ் பதிப்பு ரூ.16.15 கோடியும், தெலுங்குப் பதிப்பு ரூ.3 கோடியும் வசூலித்துள்ளன. வெளிநாட்டு சந்தையில் ரூ.12 கோடி வசூல் கிடைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய மொத்த வசூல் ரூ.34.25 கோடியாக உயர்ந்துள்ளது.
ஏற்கெனவே சூர்யா நடித்த ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய திரைப்படங்கள் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது ‘சீன்’ திரைப்படமும் வெற்றிகரமான தொடக்கத்தைப் பெற்றுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து மூன்று படங்கள் மூலம் சூர்யா ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : தீபாவளியும் தமிழ் சினிமாவும்.. 11 ஆண்டுகாலத் திரைப்பயணம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com