‘மூக்குத்தி அம்மன் 2’ வசூல் அதிகரிப்பு.. 2 நாட்களில் ரூ.4.33 கோடி!

Mookuthi Amman 2 Collection: நயன்தாரா நடிப்பில், சுந்தர் சி. இயக்கத்தில் உருவான ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

Published on: November 9, 2026 at 1:22 pm

Updated on: November 9, 2026 at 1:23 pm

சென்னை, நவ.9, 2026: நயன்தாரா நடிப்பில், சுந்தர் சி. இயக்கத்தில் உருவான ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் ஊர்வசி, ரெஜினா கசாண்ட்ரா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் ரூ.1.88 கோடி நிகர வசூல் செய்தது. தொடர்ந்து இரண்டாவது நாளான நவம்பர் 7ஆம் தேதி ரூ.2.45 கோடி வசூல் செய்து, முதல் நாளைவிட 30.3 சதவீதம் வசூல் அதிகரித்துள்ளது.

இதன் மூலம், இரண்டு நாட்களில் இப்படத்தின் இந்திய நிகர வசூல் ரூ.4.33 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த இந்திய வசூல் ரூ.5 கோடியை எட்டியுள்ளதாக சாக்னில்க் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது நாள் வசூலில் தமிழ் பதிப்பு ரூ.2.30 கோடியும், தெலுங்குப் பதிப்பு ரூ.15 லட்சமும் பங்களித்துள்ளன. விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், இரண்டாவது நாள் வசூல் அதிகரித்திருப்பது படக்குழுவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

இதையும் படிங்க : மூக்கு அறுவை சிகிச்சை.. ஸ்ரீதேவி முதலில் தயங்கினார்.. நடிகை ஜான்வி கபூர்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com