Ramayana: நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி நடிப்பில் உருவான ‘ராமாயணா: பாகம் 1’ திரைப்படம் நவம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
Ramayana: நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி நடிப்பில் உருவான ‘ராமாயணா: பாகம் 1’ திரைப்படம் நவம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

Published on: November 9, 2026 at 11:15 am
மும்பை, நவ.9, 2026: நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி நடிப்பில் உருவான ‘ராமாயணா: பாகம் 1’ திரைப்படம் நவம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவான இப்படம், வெளியான முதல் நாளிலேயே இந்தியாவில் ரூ.64.85 கோடி நிகர வசூல் செய்து கவனம் ஈர்த்தது.
இரண்டாவது நாளில் வசூல் ரூ.48 கோடியாகக் குறைந்த நிலையில், மூன்றாவது நாளான சனிக்கிழமை மீண்டும் அதிகரித்து ரூ.69.80 கோடி வசூலித்தது. இதன் மூலம் முதல் மூன்று நாட்களில் இந்தியாவில் ரூ.183 கோடிக்கும் அதிகமாக நிகர வசூல் செய்தது.
தீபாவளி பண்டிகையான ஞாயிற்றுக்கிழமை வசூல் மேலும் அதிகரித்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி மட்டும் இந்தியாவில் ரூ.32 கோடி வசூலித்த இப்படம், நான்கு நாட்களில் மொத்தமாக ரூ.215 கோடி நிகர வசூலை எட்டியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தீபாவளி நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை நோக்கி படம் முன்னேறியுள்ளது.
மேலும், பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் முதல் நான்கு நாள் வசூலையும் ‘ராமாயணா’ முறியடிக்கும் நிலையை எட்டியுள்ளது. இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர். படத்தின் இரண்டாம் பாகம் 2028ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பாக்ஸ்ஆபிஸில் சூர்யாவின், “சீன்” எப்படி? முதல் நாள் கலெக்ஷன் நிலவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com