Rajinikanth Jailer 2 Success: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.
Rajinikanth Jailer 2 Success: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.

Published on: November 9, 2026 at 2:02 pm
சென்னை, நவ.9, 2026: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது. இப்படம் வெளியான 24 நாட்களில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ.825.85 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இப்படத்தின் வெற்றிக்காக ரஜினிகாந்தை கௌரவிக்க தமிழ்த் திரைப்பட ஆக்டிவ் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்தது. இதற்காக சங்கத்தின் பொருளாளர் ஜி.தனஞ்செயன், ரஜினிகாந்தை நேரில் சந்தித்து விருது வழங்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்ட ரஜினிகாந்த் ஆச்சரியத்துடன், “அப்படியா?” எனக் கேட்டதாக தனஞ்செயன் தெரிவித்துள்ளார். மேலும், படத்தின் வெற்றிக்காக தன்னை மட்டும் ஏன் கௌரவிக்க வேண்டும் என்றும், இயக்குநர் நெல்சன், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரின் பங்களிப்பையும் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்தின் இந்த எளிமையும், சக கலைஞர்களின் உழைப்புக்கு அவர் அளித்த முக்கியத்துவமும் தங்களை வியப்பில் ஆழ்த்தியதாக தனஞ்செயன் கூறியுள்ளார். இதற்கிடையே, ‘ஜெயிலர் 2’ திரைப்படம் நவம்பர் 12ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க : மூக்கு அறுவை சிகிச்சை.. ஸ்ரீதேவி முதலில் தயங்கினார்.. நடிகை ஜான்வி கபூர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com