Scene Box Office Collection: நடிகர் சூர்யாவின் சீன் திரைப்படம் ரூ.80 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளது.
Scene Box Office Collection: நடிகர் சூர்யாவின் சீன் திரைப்படம் ரூ.80 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளது.

Published on: November 9, 2026 at 11:40 am
சென்னை, நவ.9, 2026: நடிகர் சூர்யா நடிப்பில், ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான ‘சீன்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் நஸ்ரியா நசிம், நஸ்லென் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வெளியான முதல் நாளில் இந்தியாவில் ரூ.19.15 கோடி நிகர வசூல் செய்த இப்படம், இரண்டாவது நாளில் ரூ.20.35 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இரண்டு நாட்களில் இந்தியாவில் மொத்தம் ரூ.39.50 கோடி நிகர வசூலை எட்டியுள்ளது.
வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இரண்டாவது நாளில் மட்டும் வெளிநாடுகளில் ரூ.18 கோடி வசூல் செய்துள்ள நிலையில், இரண்டு நாட்களில் வெளிநாட்டு வசூல் ரூ.35.75 கோடியாக அதிகரித்துள்ளது.
இதன் மூலம், இந்தியா மற்றும் வெளிநாடுகள் என உலகளவில் இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.81.65 கோடி வசூலை ‘சீன்’ திரைப்படம் கடந்துள்ளது. சூர்யாவின் முந்தைய படங்களான ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகியவற்றின் இரண்டு நாள் உலகளாவிய வசூலையும் இப்படம் முந்தியுள்ளது.
இதையும் படிங்க : தீபாவளியில் வசூல் சாதனை படைத்த ‘ராமாயணா’.. 4 நாட்களில் ரூ.215 கோடி வசூல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com