Dia Mirza Firecracker Controversy: தீபாவளி பட்டாசு எதிர்ப்பு வீடியோ விவகாரத்தில் நடிகை டயா மிர்சாவுக்கு ஆதரவாக மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
Dia Mirza Firecracker Controversy: தீபாவளி பட்டாசு எதிர்ப்பு வீடியோ விவகாரத்தில் நடிகை டயா மிர்சாவுக்கு ஆதரவாக மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Published on: November 4, 2026 at 1:41 pm
மும்பை, நவ.4, 2026: மும்பையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் தீபாவளியைக் கொண்டாடவும், பட்டாசுகளால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைத் தவிர்க்கவும் நடிகை டயா மிர்சா வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ தொடர்பான சர்ச்சைக்கு மும்பை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தால் தங்களுக்கு மிகுந்த வேதனை ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மும்பை மாநகராட்சியின் (BMC) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக டயா மிர்சா இந்த வீடியோவில் தோன்றியிருந்தார். இதற்கு பாஜக தலைவர்கள் மற்றும் மும்பை மேயர் ரித்து தவ்டே எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, மாநகராட்சி தனது சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து அந்த வீடியோவை நீக்கியது.
இந்த விவகாரத்தைத் தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதிகள் கிரிஷ் குல்கர்னி, நீலா கோகலே ஆகியோர் அடங்கிய அமர்வு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக வெளியிடப்பட்ட வீடியோவுக்கு மதம் சார்ந்த சாயம் பூசுவது வருத்தமளிப்பதாகக் கூறியது. மேலும், மதம், சாதி வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, நீக்கப்பட்ட டயா மிர்சாவின் வீடியோவை மீண்டும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய மும்பை மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பட்டாசுகளால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது தீபாவளிக்கு மட்டுமல்ல; ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
இதையும் படிங்க : புதிய தமிழ்ப் படங்களுக்கு தினமும் 6 காட்சிகள் அனுமதி.. தமிழக அரசு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com