ஒப்பந்தப் பணிகளுக்கு 20% கமிஷன்? சர்ச்சையில் சிக்கிய தவெக எம்.எல்.ஏ!

Kuzhandhai Rani: ஒப்பந்தப் பணிகளுக்கு 20% கமிஷன் கேட்பதாக தவெக எம்.எல்.ஏ மீது புகார் எழுந்துள்ளது.

Published on: November 4, 2026 at 1:31 pm

சென்னை, நவ.4, 2026: சிவகங்கை தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணி, அரசு வளர்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை ஒதுக்கீடு செய்ய 20 சதவீதம் வரை கமிஷன் கேட்பதாக, சிவகங்கை ஊராட்சி ஒன்றிய பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

வி.பி ஜி. ராம் ஜி (VB-G RAM G) திட்டத்தின் கீழ் சுமார் ரூ.20 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை, விதிகளை மீறி தவெக கட்சி நிர்வாகிகளுக்கு ஒதுக்க முயற்சிப்பதாகவும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக எம்.எல்.ஏவை நேரில் சந்தித்து, அனைத்துப் பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்களுக்கும் பணிகளைப் பகிர்ந்தளிக்கக் கோரியதாக சங்கப் பொருளாளர் எம். ஜெகன் கூறியுள்ளார்.

ஆனால், பணிகள் கட்சி நிர்வாகிகளுக்கே வழங்கப்படும் என எம்.எல்.ஏ தெரிவித்ததாகவும், தங்களை அவமரியாதை செய்து வெளியேறுமாறு கூறியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கிடையே, ஊராட்சித் தலைவர் இல்லாத நிலையில், விதிகளின்படி வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் ஒப்பந்தங்கள் ஒதுக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் புகார் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பி. ஆகாஷிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணிகள் சட்ட விதிகளின்படியே ஒதுக்கப்படும் என்றும், விதிமீறல்கள் அனுமதிக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார். எம்.எல்.ஏவைத் தொடர்புகொள்ள முடியாத நிலையில், பின்னர் விளக்கம் அளிப்பார் என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தூத்துக்குடியில் பயன்பாடற்ற கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளை மூட உத்தரவு.. ஐகோர்ட்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com