Sai Pallavi OM Movie Police Role: ஓம் படத்தில் போலீஸ் கதாபாத்திரம் ஏற்றுள்ள நிலையில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தன் மீது நம்பிக்கை வைத்திருந்தார் என்கிறார் நடிகை சாய் பல்லவி.
Sai Pallavi OM Movie Police Role: ஓம் படத்தில் போலீஸ் கதாபாத்திரம் ஏற்றுள்ள நிலையில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தன் மீது நம்பிக்கை வைத்திருந்தார் என்கிறார் நடிகை சாய் பல்லவி.

Published on: November 8, 2026 at 12:34 pm
சென்னை, நவ.8, 2026: தனுஷ் – மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்: Chapter 1 – உதிரம்: தி ப்ளட் வுட்’ திரைப்படத்தில் சாய் பல்லவி ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய சாய் பல்லவி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனது நடிப்புத் திறமை மீது தன்னைவிட அதிக நம்பிக்கை வைத்திருந்ததாகத் தெரிவித்தார். குறிப்பாக, காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என அவர் நம்பியதாகக் கூறினார்.
மேலும், இப்படத்தில் தனது கதாபாத்திரம் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட வகையில் எழுதப்பட்டுள்ளதாகவும், பெண்களின் கதாபாத்திரங்களை இயக்குநர் சிறப்பாக வடிவமைப்பதாகவும் சாய் பல்லவி பாராட்டினார். படத்தின் சண்டைக் காட்சிகளில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியும் தெரிவித்தார்.
தனுஷ், மம்மூட்டி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கமல்ஹாசனின் புதிய படம் சண்டியர்.. சர்ச்சையை கிளப்பிய வாசகம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com