மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மசோதா.. சரத் பவாரிடம் ஆதரவு கோரும் பாஜக!

BJP Seeks Sharad Pawar’s Support: மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மசோதாக்கள் உள்ளிட்ட விவகாரங்களில், சரத் பவாரிடம் பாஜக ஆதரவு கோருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published on: November 8, 2026 at 1:31 pm

மும்பை, நவ.8, 2026: மகளிர் இடஒதுக்கீடு மற்றும் மக்களவைத் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி- சரத் பவார்) கட்சியிடம் பாஜக ஆதரவு கோரி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மக்களவையில் மசோதாவுக்கு ஆதரவாக 298 உறுப்பினர்களும், எதிராக 230 உறுப்பினர்களும் வாக்களித்ததால் மசோதா தோல்வியடைந்தது.

சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (NCP-SP) கட்சிக்கு மக்களவையில் 8 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவு கிடைத்தால் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான பாஜகவின் முயற்சிக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என அக்கட்சியினர் கருதுகின்றனர். இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி சரத் பவாரிடம் நலம் விசாரித்ததுடன், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தேசியவாத காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதற்கிடையே, சரத் பவார் மற்றும் சுனேத்ரா பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸின் இரு அணிகளும் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இருப்பினும், இரு அணிகளின் இணைப்பு தொடர்பான இறுதி முடிவை சரத் பவார் மற்றும் சுனேத்ரா பவார் ஆகியோரே எடுக்க வேண்டும் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்திரா, ராஜீவ் மறைவுக்குப் பிறகும் இந்தியாவை விட்டு செல்ல விரும்பவில்லை.. சோனியா காந்தி உருக்கம்!

இந்திரா, ராஜீவ் மறைவுக்குப் பிறகும் இந்தியாவை விட்டு செல்ல விரும்பவில்லை.. சோனியா காந்தி உருக்கம்!
Sonia Gandhi on India

இந்திரா, ராஜீவ் மறைவுக்குப் பிறகும் இந்தியாவை விட்டு செல்ல விரும்பவில்லை.. சோனியா காந்தி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com