சென்னை டூ சொந்த ஊர்.. தீபாவளி சிறப்புப் பேருந்துகளில் 2 நாட்களில் 3.79 லட்சம் பேர் பயணம்!

Diwali Special Bus Travel Statistics: தீபாவளி சிறப்புப் பேருந்துகளில் 2 நாட்களில் 3.79 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

Published on: November 8, 2026 at 1:38 pm

சென்னை, நவ.8, 2026: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில், முதல் இரண்டு நாட்களில் மொத்தம் 3.79 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

நவம்பர் 5ஆம் தேதி வியாழக்கிழமை முதல் நாளில் 1.40 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இரண்டாவது நாளான நவம்பர் 6ஆம் தேதி மட்டும் 2.39 லட்சம் பேர் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை 2,191 வழக்கமான பேருந்துகள் மற்றும் 2,896 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 5,087 பேருந்துகள் இயக்கப்பட்டன. முதல் இரண்டு நாட்களில் மொத்தம் 8,296 பேருந்துகள் மூலம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

தீபாவளி பயண நெரிசலைக் கட்டுப்படுத்த நவம்பர் 5 முதல் 7ஆம் தேதி வரை மூன்று நாட்களில் மொத்தம் 15,659 பேருந்துகளை இயக்கத் தமிழக போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. இதில் 9,086 சிறப்புப் பேருந்துகள் அடங்கும். சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட 5 இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதையும் படிங்க : இந்தியாவின் முதல் ஏ.ஐ ஊழல்.. டிஜிட்டல் கரையான்.. தி.மு.க.வை விமர்சித்த அமைச்சர் ராஜ்மோகன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com