கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க்கடன்.. ரூ.75,000 பயிர்க்கடன் தள்ளுபடி!

Tamil Nadu Crop Loan Waiver: தமிழ்நாட்டில், அனைத்து தகுதியுள்ள விவசாயிகளுக்கும் ரூ.75,000 பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

Published on: November 7, 2026 at 6:15 pm

சென்னை, நவ.7, 2026: தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் பெற்ற தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75,000 வரை கடன் தள்ளுபடி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு விரிவுபடுத்தியுள்ளது. இதன்மூலம் சுமார் 13.25 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 மே 1 முதல் 2026 மார்ச் 31 வரை கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு இந்தச் சலுகை பொருந்தும். ரூ.75,000 வரை கடன் பெற்றவர்களுக்கு அசல் மற்றும் வட்டி உள்ளிட்ட முழுத் தொகையும் தள்ளுபடி செய்யப்படும்.

ரூ.75,000-க்கு மேல் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கும் ரூ.75,000 தள்ளுபடி வழங்கப்படும். மீதமுள்ள கடன் தொகையை விவசாயிகள் செலுத்த வேண்டும். இதன்படி, 5,90,621 விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடியும், 7,34,260 விவசாயிகளுக்கு ரூ.75,000 நிவாரணமும் கிடைக்கும்.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த 2026-27 நிதியாண்டில் ரூ.2,842.774 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான அரசாணையை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை நவம்பர் 6ஆம் தேதி வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : பெரியார் பெயரால் மக்கள் பணம் கொள்ளை.. தி.மு.க. மீது விஜய் குற்றஞ்சாட்டு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com