ஆற்று மணல் குவாரி முறைகேடு புகார்.. தி.மு.க துரைமுருகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு!

Duraimurugan Sand Quarry Case: ஆற்று மணல் குவாரி முறைகேடு புகாரில், துரைமுருகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published on: November 7, 2026 at 3:00 pm

Updated on: November 7, 2026 at 3:01 pm

சென்னை, நவ.7, 2026: தமிழகத்தில் ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, திமுக மூத்த தலைவரும் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர்கள், நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2021 முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், தமிழகத்தின் 28 மணல் குவாரிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்துள்ளது. வெளிப்படையான ஒப்பந்த முறையைப் பின்பற்றாமல் ஒப்பந்தங்கள் வழங்கியது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மணல் அள்ளியது, போலி அனுமதிச் சீட்டுகளைப் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த முறைகேடுகளால், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நான்கு குவாரிகளில் மட்டும் அரசுக்கு ரூ.1,427 கோடிக்கும் அதிகமான வருவாய் இழப்பு ஏற்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை உள்ளிட்ட தரப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் 34 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் 825 ஆவணங்கள், 11 மின்னணு சாதனங்கள் மற்றும் மூன்று வங்கி லாக்கர் சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அன்பில் மகேஷ் ஜாமீன் மனு.. நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com