தீபாவளி நாளில் சென்னையில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்

Rain Alert: தீபாவளி நாளில் சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Published on: November 6, 2026 at 11:56 am

சென்னை, நவ.6, 2026: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தீபாவளி வார இறுதியில் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடி, மின்னலுடன் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசக்கூடும்.

கிழக்குத் திசைக் காற்று மற்றும் வளிமண்டல ஈரப்பதம் காரணமாக, நவம்பர் 14 அல்லது 15ஆம் தேதியிலும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி வி.ஆர். துரை தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சனிக்கிழமையும் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் கனமழை தொடரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கிய அக்டோபர் 1 முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை தமிழகத்தில் இயல்பான அளவான 211 மி.மீட்டரை விட 10 சதவீதம் கூடுதலாக, 231.5 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் தீபாவளி கொண்டாட்டத்தின்போது மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பாமணி இல்லத்தில் பணியைத் தொடங்கிய முதல்வர் விஜய்.. ‘வெற்றி இல்லம்’ எனப் பெயர் மாற்றம்!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு!
Rain Alert

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com