‘டெத் ரயில்வே’ படத்தில் ஐ.என்.ஏ. அதிகாரியாக சசிகுமார்.. எகிறும் எதிர்பார்ப்பு!

Sasikumar’s Death Railway Movie: ‘டெத் ரயில்வே’ படத்தில் ஐ.என்.ஏ. அதிகாரியாக சசிகுமார் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published on: November 6, 2026 at 12:07 pm

சென்னை, நவ.6, 2026: நடிகர் சசிகுமார், இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கும் புதிய வரலாற்றுப் போர் திரைப்படத்தில் இந்திய தேசிய ராணுவத்தின் (INA) அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘டெத் ரயில்வே’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பையும், முதல் காட்சித் தொகுப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

‘யாத்திசை’ படத்தின் மூலம் கவனம் பெற்ற தரணி ராசேந்திரன், இரண்டாம் உலகப் போர் மற்றும் இந்திய விடுதலைப் போராட்டத்தின் பின்னணியில் இப்படத்தை உருவாக்குகிறார். 1944ஆம் ஆண்டு ஜப்பானியப் படைகள் பர்மா வழியாக இந்தியாவை நோக்கி முன்னேறிய காலகட்டத்தை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே காலத்தில், நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் போரிட்ட இந்திய வீரர்களின் வரலாற்றில் அதிகம் அறியப்படாத ஒரு பகுதியை இப்படம் பேசுகிறது. போர் காட்சிகளுடன் காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான அம்சங்களும் கதையில் இடம்பெறுகின்றன.

சசிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சேயோன், கிஷோர், பவானி ஸ்ரீ, ஷிவதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அசோக் செல்வன் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சார்தக் கல்யாணி இசையமைக்கிறார்.

இதையும் படிங்க : ‘முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்’.. மொத ராத்திரி நடிகை தீபிகா ராஜா!

‘முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்’.. மொத ராத்திரி நடிகை தீபிகா ராஜா!
Deepika Raja

‘முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்’.. மொத ராத்திரி நடிகை தீபிகா ராஜா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com