Vijay’s Vettri Illam: பாமணி இல்லத்தில் இருந்து பணியைத் தொடங்கினார் முதல்வர் விஜய்; ‘வெற்றி இல்லம்’எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Vijay’s Vettri Illam: பாமணி இல்லத்தில் இருந்து பணியைத் தொடங்கினார் முதல்வர் விஜய்; ‘வெற்றி இல்லம்’எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Published on: November 6, 2026 at 11:49 am
சென்னை, நவ.6, 2026: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அரசு பங்களாவான பாமணி இல்லத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வியாழக்கிழமை தனது அலுவல் பணிகளைத் தொடங்கினார். புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அந்த இல்லம் முதலமைச்சரின் முகாம் அலுவலகமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது.
இந்த இல்லத்துக்கு ‘வெற்றி இல்லம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. முதலமைச்சரின் அதிகாரப்பூர்வப் பணிகளுக்குத் தேவையான நவீன பாதுகாப்பு வசதிகள், அலுவலகக் கட்டமைப்புகள் உள்ளிட்டவை அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. அங்கு சுமார் மூன்று மணி நேரம் இருந்து விஜய் அலுவல் பணிகளை மேற்கொண்டார்.
இதற்கு முன்பு சென்னை ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் முதலமைச்சரின் முகாம் அலுவலகம் செயல்பட்டு வந்தது. அங்கு பாதுகாப்பு வாகனங்களை நிறுத்துவது, பாதுகாப்புப் படையினரின் வாகன அணிவகுப்பு செல்வது போன்றவற்றால் அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் முகாம் அலுவலகத்தை ராஜா அண்ணாமலைபுரத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குப் பிறகு, அரசு பங்களாவை முகாம் அலுவலகமாகவும் அதிகாரப்பூர்வ இல்லமாகவும் பயன்படுத்தும் இரண்டாவது முதலமைச்சராக விஜய் உள்ளார்.
இதையும் படிங்க : சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைக்க வேண்டும்.. பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com