ஆசை காட்டி குதிரைப் பேரம்.. த.வெ.க மீது நயினார் விமர்சனம்!

TVK Horse-Trading Allegation: மற்ற கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆசை காட்டி தவெகவே குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Published on: November 6, 2026 at 11:27 am

சென்னை, நவ.6, 2026: தமிழகத்தில் தவெக எம்.எல்.ஏ.க்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சிப்பதாக அமைச்சர் ஆர். நிர்மல்குமார் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக அரசின் நிர்வாகத் தோல்விகளைத் திசைதிருப்பவே இத்தகைய புகார்கள் முன்வைக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் பாஜகவின் ஆதரவுடன் தவெக ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிப்பதாக அமைச்சர் கூறிய குற்றச்சாட்டையும் அவர் அடிப்படையற்றது என மறுத்துள்ளார். மேலும், மற்ற கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆசை காட்டி தவெகவே குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதன் மூலம் அரசின் துறைசார் நிர்வாகக் குறைபாடுகளை மறைக்க முடியாது என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆட்சியின் நிர்வாகத் தோல்விகளுக்குப் பதிலாக மற்றவர்களைக் குறை கூறுவதை அமைச்சர் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், யூனிட் ரூ.41.50-க்கு மின்சாரம் கொள்முதல் செய்யும் திட்டம் தொடர்பான சர்ச்சை, சிறைக் கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் உள்ளிட்ட நிர்வாகக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைக்க வேண்டும்.. பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com