டிச. 15 முதல் கார், பைக் காப்பீட்டில் புதிய மாற்றம்.. 4 வகைகளாகப் பிரிக்கும் IRDAI!

Vehicle Insurance Changes: டிச. 15 முதல் கார், பைக் காப்பீட்டில் புதிய மாற்றம் அமலாகிறது.

Published on: November 7, 2026 at 1:42 pm

சென்னை, நவ.7, 2026: கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான காப்பீட்டு நடைமுறைகளில் வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் புதிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான IRDAI, மோட்டார் காப்பீட்டை நான்கு பிரிவுகளாகப் பிரித்து, வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பாதுகாப்பைத் தெளிவாகத் தேர்வு செய்யும் வகையில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, விபத்தில் மூன்றாம் நபருக்கு ஏற்படும் காயம், உயிரிழப்பு அல்லது சொத்துச் சேதத்துக்கான இழப்பீட்டை வழங்கும் மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயமாகத் தொடரும். வாகனத்தில் பயணிப்பவர்களுக்கான சட்டப்பூர்வ பொறுப்புக் காப்பீடு, கூடுதல் தனிநபர் விபத்துக் காப்பீடு மற்றும் சொந்த வாகனச் சேதத்துக்கான காப்பீடு ஆகியவை விருப்பத் தேர்வுகளாக இருக்கும். இருப்பினும், வாகன உரிமையாளருக்கான தனிநபர் விபத்துக் காப்பீடு தொடர்பான கட்டாய விதிமுறை தொடரும்.

மேலும், காப்பீட்டு நிறுவனங்கள் ஒவ்வொரு காப்பீட்டுப் பிரிவுக்கும் தனித்தனியாக வசூலிக்கப்படும் பிரீமியம் தொகையைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். காப்பீடு வாங்கும்போது வாடிக்கையாளர்களுக்கு விருப்பத் தேர்வு படிவம் மற்றும் காப்பீட்டு விவரங்களை விளக்கும் தகவல் தாள் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் எந்தெந்த பாதுகாப்புகள் பாலிசியில் இடம்பெற்றுள்ளன என்பதை வாடிக்கையாளர்கள் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.

ஏற்கெனவே மூன்றாம் நபர் காப்பீடு வைத்திருப்பவர்களும், அதே காப்பீட்டு நிறுவனத்திடம் கூடுதல் பிரீமியம் செலுத்தி பயணிகளுக்கான பாதுகாப்பைச் சேர்த்துக்கொள்ளலாம். இதற்காக நடைமுறையில் உள்ள பாலிசியை ரத்து செய்ய வேண்டியதில்லை. இந்தப் புதிய நடைமுறைகள் டிசம்பர் 15, 2026 முதல் வழங்கப்படும் கார் மற்றும் இருசக்கர வாகனக் காப்பீட்டுப் பாலிசிகளுக்குப் பொருந்தும்.

இதையும் படிங்க : அமுல் நெய், வெண்ணெய் விலை உயர்வு.. 1 கிலோ நெய் ரூ.680 ஆக அதிகரிப்பு!

அமெரிக்க தேர்தல் எதிரொலி.. இந்திய பங்குச்சந்தையில் அதிரடி ஏற்றம்.. சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் உயர்வு!
Sensex Surges 1,300 Points

அமெரிக்க தேர்தல் எதிரொலி.. இந்திய பங்குச்சந்தையில் அதிரடி ஏற்றம்.. சென்செக்ஸ் 1,300 புள்ளிகள்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com