அமுல் நெய், வெண்ணெய் விலை உயர்வு.. 1 கிலோ நெய் ரூ.680 ஆக அதிகரிப்பு!

Amul Ghee Price Hike: அமுல் நெய், வெண்ணெய் விலை உயர்வு கண்டுள்ளது; 1 கிலோ நெய் ரூ.680 ஆக அதிகரித்து காணப்படுகிறது.

Published on: November 7, 2026 at 12:51 pm

அகமதாபாத், நவ.7, 2026: நாடு முழுவதும் அமுல் நிறுவனத்தின் நெய் மற்றும் வெண்ணெய் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, 1 கிலோ அமுல் நெய் பாக்கெட்டின் விலை ரூ.50 அதிகரித்து, ரூ.630-ல் இருந்து ரூ.680 ஆக உயர்ந்துள்ளது. புதிய விலைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

அதேபோல், 500 கிராம் அமுல் தூய நெய் பாக்கெட்டின் விலை ரூ.325-ல் இருந்து ரூ.345 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.20 அதிகரித்துள்ளது.

வெண்ணெய் விலையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 100 கிராம் பாக்கெட்டின் விலை ரூ.63-ல் இருந்து ரூ.66 ஆகவும், 500 கிராம் பாக்கெட்டின் விலை ரூ.310-ல் இருந்து ரூ.325 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய விலைகள் சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் ஆன்லைன் விற்பனைத் தளங்களில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு, கடந்த மே மாதம் அமுல் பால் பாக்கெட்டுகளின் விலையையும் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சென்னையில் தங்கம் விலையில் மாற்றமில்லை.. புதிய விலையை நோட் பண்ணுங்க!

அமெரிக்க தேர்தல் எதிரொலி.. இந்திய பங்குச்சந்தையில் அதிரடி ஏற்றம்.. சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் உயர்வு!
Sensex Surges 1,300 Points

அமெரிக்க தேர்தல் எதிரொலி.. இந்திய பங்குச்சந்தையில் அதிரடி ஏற்றம்.. சென்செக்ஸ் 1,300 புள்ளிகள்

டாஸ்மாக் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்தில் மாற்றம்.. ஏ.டி.எம் மூலம் பணம் வழங்க முடிவு!
TASMAC Bottle Return

டாஸ்மாக் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்தில் மாற்றம்.. ஏ.டி.எம் மூலம் பணம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com