TASMAC Bottle Return : டாஸ்மாக் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்தில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, தானியங்கி இயந்திரங்கள் மூலம் பணம் திரும்ப வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
TASMAC Bottle Return : டாஸ்மாக் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்தில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, தானியங்கி இயந்திரங்கள் மூலம் பணம் திரும்ப வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Published on: November 5, 2026 at 10:53 am
சென்னை, நவ.5, 2026: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் முழுமையாகத் தானியங்கி இயந்திரங்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான புதிய தொழில்நுட்ப முறைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அரசாணையை உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்ப வழங்கும்போது, அதற்கான ரூ.10 தொகை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் நுகர்வோருக்குத் திருப்பி வழங்கப்படும். இதற்காக ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்கள் (Reverse Vending Machines) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பு மையங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் மதுபாட்டில்களை வாங்கிய அதே கடைக்குச் சென்று திரும்ப ஒப்படைக்க வேண்டிய அவசியம் இருக்காது.
ஏற்கெனவே சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில டாஸ்மாக் கடைகளில் இந்த இயந்திரங்கள் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எக்மோர் ஆல்பர்ட் திரையரங்கம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த ஜூன் மாதம் முதல் இயந்திரம் நிறுவப்பட்டது. தற்போது 31 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள இந்தத் திட்டம், மீதமுள்ள மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
மேலும், காலி மதுபாட்டில்களைச் சேகரித்தல், எண்ணுதல், பாதுகாத்தல், போக்குவரத்து மற்றும் பணத்தைத் திரும்ப வழங்குதல் உள்ளிட்ட பணிகளைத் தனியார் ஒப்பந்த நிறுவனமே மேற்கொள்ளும். இதனால் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் படிப்படியாக இந்தப் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.
இதையும் படிங்க : 125 எம்.எல்.ஏக்களுக்கு அரசு கார்கள் வழங்க முடிவு.. திமுக, இடதுசாரிகள் புறக்கணிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com