Ajith Kumar Custodial Death Case: அஜித் குமார் காவல் மரண வழக்கு: 4 போலீஸாரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன; 9 மாதங்களில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Ajith Kumar Custodial Death Case: அஜித் குமார் காவல் மரண வழக்கு: 4 போலீஸாரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன; 9 மாதங்களில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published on: November 4, 2026 at 4:23 pm
மதுரை, நவ.4, 2026: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலராகப் பணியாற்றிய அஜித் குமார், கடந்த 2025 ஜூன் 28-ஆம் தேதி காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கில், நான்கு போலீஸார் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
முன்னாள் மானாமதுரை டிஎஸ்பி என். சண்முகசுந்தரம், முன்னாள் திருப்புவனம் காவல் ஆய்வாளர் எஸ்.பி. ரமேஷ்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் எஸ். சிவகுமார் மற்றும் தலைமை காவலர் ஜி. இளையராஜா ஆகியோர் தங்களை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
அஜித் குமார் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மொத்தம் 10 போலீஸார் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல் நிலைய ஆவணங்களைத் திருத்தியது, சாட்சியங்களை மறைக்க முயன்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் விசாரணையில் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி முருகன், நான்கு போலீஸாரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அஜித் குமார் காவல் மரண வழக்கின் விசாரணையை அடுத்த 9 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : 125 எம்.எல்.ஏக்களுக்கு அரசு கார்கள் வழங்க முடிவு.. திமுக, இடதுசாரிகள் புறக்கணிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com