20 ஆண்டுகால சொத்துக் குவிப்பு வழக்கு.. அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை!

Anitha Radhakrishnan: 20 ஆண்டுகால சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Published on: November 4, 2026 at 3:53 pm

Updated on: November 4, 2026 at 3:54 pm

தூத்துக்குடி, நவ.4, 2026: திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில், அவரையும் அவரது குடும்பத்தினர் ஆறு பேரையும் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2001 முதல் 2006ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், தனது வருமானத்திற்கு அதிகமாக சுமார் ரூ.2.07 கோடி மதிப்பிலான சொத்துகளைச் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2006ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனுடன் அவரது மனைவி ஜெயகாந்தி, மூன்று மகன்கள் மற்றும் இரண்டு சகோதரர்கள் என மொத்தம் ஏழு பேர் சேர்க்கப்பட்டிருந்தனர். சுமார் 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், 108 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, குறுக்கு விசாரணையும் முடிக்கப்பட்டது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட நீதிபதி சுபாதேவி, குற்றச்சாட்டுகளை நிரூபிக்க லஞ்ச ஒழிப்புத்துறையினரும் அரசுத் தரப்பும் தவறிவிட்டதாகக் கூறி ஏழு பேரையும் விடுதலை செய்தார். இதன் மூலம் நீண்டகாலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

இதையும் படிங்க : தொடர் நிதி மோசடி புகார்.. ‘லயன்’ முத்துவேல் குண்டர் சட்டத்தில் கைது!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com