Rimi Tomy Second Marriage: 6 ஆண்டுகளுக்குப் பிறகு மறுமணம் செய்யவுள்ளார் பிரபல பாடகி ரிமி டாமி. இவரின் திருமணம் நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறுகிறது.
Rimi Tomy Second Marriage: 6 ஆண்டுகளுக்குப் பிறகு மறுமணம் செய்யவுள்ளார் பிரபல பாடகி ரிமி டாமி. இவரின் திருமணம் நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறுகிறது.

Published on: November 4, 2026 at 3:32 pm
திருவனந்தபுரம், நவ.4, 2026: மலையாளத் திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகியும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ரிமி டாமி, தனது இரண்டாவது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது புதிய வாழ்க்கையைத் தொடங்க அவர் முடிவு செய்துள்ளார்.
தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில், மும்பையைச் சேர்ந்த பாடி பில்டரும், உடற்பயிற்சிப் பயிற்சியாளருமான லிபின் மேத்யூவைத் திருமணம் செய்ய உள்ளதாக ரிமி தெரிவித்துள்ளார். அவர் நடிகரோ, பாடகரோ, பிரபலமோ, கோடீஸ்வரரோ இல்லை என்றும், தன்னைப் புரிந்துகொண்டு மன அமைதியைத் தரும் ஒருவராக இருப்பதே முக்கியம் என்றும் கூறியுள்ளார்.
இருவரும் கடந்த மார்ச் மாதம் முதன்முதலில் தொலைபேசியில் பேசியதாகவும், பின்னர் நேரில் சந்தித்துக் கொண்டதாகவும் ரிமி தெரிவித்துள்ளார். இவர்களது திருமணம் வரும் நவம்பர் 14ஆம் தேதி மும்பை அருகே உள்ள டோம்பிவலியில் தேவாலயத்தில் எளிமையான முறையில் நடைபெற உள்ளது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் பங்கேற்க உள்ளனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு தொழிலதிபர் ராய்ஸ் கிழக்கூடனைக் கரம் பிடித்த ரிமி டாமி, 11 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு 2019ஆம் ஆண்டு இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்றனர். இதற்கிடையே, தனது முன்னாள் கணவரின் புகைப்படங்களைத் தற்போதைய திருமணச் செய்திகளுடன் பயன்படுத்த வேண்டாம் என்றும் ரிமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : ரூ.1,000 கோடியை நோக்கி நகரும் ஜெயிலர்-2.. 19 நாட்களில் வசூல் அறிக்கை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com