Rescue: திருச்செந்தூர் கோவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த சாத்தூரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சரண், திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டார். இதைக் கண்ட கடற்கரை பாதுகாப்புப் பணியாளர் சிவராஜா கடலில் குதித்து சிறுவனை பத்திரமாக மீட்டார்.





