Tiruchendur | திருச்செந்தூர் கோவிலில் மார்கழி பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளதாக ஆணையர் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பூஜை மாற்றங்கள் தொடர்பான முழு விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
Tiruchendur | திருச்செந்தூர் கோவிலில் மார்கழி பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளதாக ஆணையர் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பூஜை மாற்றங்கள் தொடர்பான முழு விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
Published on: December 10, 2024 at 11:08 am
Updated on: December 10, 2024 at 11:12 am
Tiruchendur | திருச்செந்தூர் முருகன் கோவிலில் மார்கழி மாத பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “தமிழ் மாதமான மார்கழி வருகிற டிச.16ஆம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் ஜனவரி 13-ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த நாட்களில் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.
காலை 5.15 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் காலசந்தி பூஜை, 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், காலை 8.45 முதல் 9 மணிக்குள் உச்சிகால தீபாராதனை நடைபெறும். பின்னர் மாலை 3.00 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனையும், இரவு 8 மணி முதல் 8.30க்குள் பள்ளியறை தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் கோவில் நடை திருக்காப்பிடப்படும்.
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மார்கழி 29 (ஜன.13) (திங்கள்கிழமை) அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. மற்ற காலங்கள் அனைத்தும் மார்கழி மாத பூஜைகள் கால அட்டவணைப்படி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பிரபஞ்சத்தை இயக்கும் 9 விதிகள் ; கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொன்னவை என்ன ?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com