Mythology | ஐயப்ப சுவாமி கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் இருமுடியில் உள்ள நெய் தேங்காயின் ரகசியம் என்னவென்று தெரியுமா?
Mythology | ஐயப்ப சுவாமி கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் இருமுடியில் உள்ள நெய் தேங்காயின் ரகசியம் என்னவென்று தெரியுமா?
Published on: December 20, 2024 at 11:43 am
Mythology | சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கொண்டு செல்லும் இருமுடியில் உள்ள முக்கியமான ஒரு பொருள் என்னவென்றால் அது நெய் தேங்காய் ஆகும். இருமுடி கட்டுவதற்கு முன்னரே தேங்காயின் ஒரு கண்ணில் துளையிட்டு அதன் வழியாக அதில் உள்ள நீரை வெளியே எடுத்து விடுவர். பின்னர் அந்த தேங்காவை நன்கு காய வைத்து அந்த தேங்காயின் உள்ளே காய்ச்சிய பசு நெய்யை ஊற்றுவர்.
இவ்வாறு கொண்டு செல்லும் நெய், தேங்காய்க்கு ஒரு ரகசியம் உள்ளது அது என்னவென்றால் ஐயப்ப சுவாமியின் திருப்பாதத்தை சரணடைவது ஆகும். அதாவது தேங்காய் நமது பூத உடலையும் அதில் உள்ள நெய் உடலின் உள்ளே இருக்கும் உயிரையும் குறிக்கிறது. இந்த தேங்காயை கவனமாகவும் பத்திரமாகவும் எடுத்துச் சென்று அதில் உள்ள நெய்யை ஐயப்ப சுவாமியின் அபிஷேகத்திற்காக ஒப்படைக்க வேண்டும்.
தேங்காயை சன்னதியின் எதிரே உள்ள தீயில் எரித்து விட வேண்டும். இதற்கான பொருள் ஐயப்பா என் உயிரை உன் பாதத்தில் ஒப்படைத்து விட்டேன். என் உடலை தீக்கு சமர்ப்பித்து விட்டேன். இனி என் சுக துக்கங்களையும் என் வாழ்க்கையையும் நீயே பார்த்துக்கொள் என்பதாகும். அதுமட்டுமல்லாமல் இறந்த பின்னர் உடலை தீயில் ஒப்படைத்துவிட்டு உயிரை ஐயப்பனின் பாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற தத்துவத்தை இது உணர்த்துகிறது. நமது உயிரை ஐயப்பனின் பாதத்தில் சமர்ப்பிக்கவே இந்த நெய் தேங்காய் எடுத்து செல்லப்படுகிறது.
இதையும் படிங்க : அனுமனை மிஞ்சிய சேவையா ; ராமபிரானின் இந்த திருவிளையாடல் பற்றி தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com