Mythology | ஐயப்ப சுவாமி பக்தர்களுக்கு ஆசி வழங்கும் சனீஸ்வரர்.
Mythology | ஐயப்ப சுவாமி பக்தர்களுக்கு ஆசி வழங்கும் சனீஸ்வரர்.
Published on: December 4, 2024 at 10:27 am
Mythology | சனீஸ்வர பகவான் ஐயப்ப பக்தரை பிடிக்க சென்றபோது ஐயப்பன் அவரை தடுத்து நிறுத்தி எனது பக்தர்களை ஏன் தண்டிக்கிறீர்கள் என கேட்டார். அதற்கு சனீஸ்வரர் ஏழரை சனியின் காலம் வரும் நேரத்தில் பாரபட்சம் பார்க்காமல் அவர்களை பிடிப்பேன் அதுதான் என்னுடைய தர்மம் மேலும் மானிடர்கள் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்ப அவர்களை தண்டிக்கிறேன் என்றார்.
அதற்கு ஐயப்பன் சரி இனிமேல் நீ தரும் தண்டனைகளை என்னிடம் சொல் அந்த தண்டனைகளை ஒரு மண்டல காலத்தில் அனுபவிக்குமாறு எனது பக்தர்களுக்கு விரத முறைகளை நான் எடுத்து வைப்பேன் என்றார். நான் கொடுக்கும் கஷ்டங்களையும் தண்டனையை ஒரு மண்டல காலத்தில் எப்படி கொடுக்க முடியும் என்று சனீஸ்வரர் கேட்க அதற்கு ஐயப்பன் சுவாமி கவலைப்படாதீர்கள் என்னுடைய பக்தர்கள் ஒருவேளை உணவு உண்டு திருப்தி அடைவார்கள், வெறும் தரையிலேயே தூங்குவார்கள், கடுமையான பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடித்து காடு மேடலாம் கடந்து என்னை வந்து தரிசிப்பார்கள்.
அதோடு உனக்கு பிடித்த கருப்பு நிற ஆடையை எனது பக்தர்களை அணியச் செய்து, கால் அணி அணியாமல், முடி திருத்திக் கொள்ளாமல் சுக துக்கங்களில் கலந்து கொள்ளாமல் அனைவராலும் சுவாமி என்று அழைக்க செய்வேன். அதிகாலையிலும் மாலையிலும் குளிர்ந்த நீரில் எனது பக்தர்களை நீராட செய்வேன். அவர்கள் மீது நீ உன் கொடூர பார்வையை செலுத்தாமல் மனம் இறங்கி கனிவோடு அருள் ஆசி வழங்கி வர வேண்டும் என்றார்.
இதையும் படிங்க கன்னியாகுமரியில் அற்புதம் செய்யும் மாயம்மா; எங்கிருந்து வந்தவர் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com