Mythology: 40 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்திவரதர் பற்றி தெரியுமா?
Mythology: 40 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்திவரதர் பற்றி தெரியுமா?
Published on: April 3, 2025 at 10:57 am
காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் 40 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் திருக்குளத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலிக்கிறார் அத்திவரதர். இந்த அத்திவரதர் அத்தி மரத்தால் செய்யப்பட்டவர். இந்த ஒன்பது அடி சிலை வசந்த மண்டபத்தில் 48 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது.
முதல் 24 நாட்கள் தூங்கும் நிலையிலும். அடுத்து 24 நாட்கள் நிற்கும் நிலையிலும் பக்தர்களுக்கு புன்னகையுடன் மனமகிழ்ச்சியுடன் காட்சியளிக்கிறார். ஒருமுறை பிரம்மதேவர் தமது காரியம் சிறப்பாக நடைபெற காஞ்சியில் யாகம் ஒன்றை செய்தார். தன்னை அழைக்காமல் யாகம் செய்த பிரம்ம தேவரிடம் கோபம் கொண்டார் சரஸ்வதி தேவி. தன்னை அழைக்காததால் யாகத்திற்கு சரஸ்வதி தேவி வரவில்லை.
சரஸ்வதி தேவி இல்லாமல் யாகத்தை பிரம்மதேவரால் நிறைவு செய்ய முடியாது. உடனே பிரம்மதேவர் சரஸ்வதி தேவிக்கு பதிலாக காயத்ரி, சாவித்திரி ஆகியோரின் துணையுடன் யாகம் செய்தார். இதனால் கடுமையாக கோபம் கொண்ட சரஸ்வதி தேவி பிரம்மதேவரின் யாகசாலையை அழிக்க முடிவு செய்து பெகவதி ஆறாக மாறி வெள்ளப்பெருக்கு எடுத்து வந்தாள்.
பிரம்ம தேவரின் தியாகத்தை காப்பதற்காக திருமால் நதிக்கு நடுவில் சயன கோலம் கொண்டார். இதனால் சரஸ்வதி தேவி தன் பாதையை மாற்றிக் கொண்டாள். பிரம்மதேவரின் யாகமும் சிறப்பாக நிறைவு பெற்றது. தனக்காக வந்து யாகத்தை காத்த பெருமாளின் கருணையை எண்ணி நெகிழ்ந்தார் பிரம்மதேவர். அப்போது தேவர்களும் பெருமாளிடம் வரங்களை கேட்டனர். தேவர்கள் கேட்ட எல்லா வரங்களையும் கொடுத்ததால் பெருமாள் வரதர் என்ற திருப்பெயரையும் பெற்றார்.
இதையும் படிங்க:. இந்தியாவில் நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் : எங்கெங்கு அமைந்துள்ளன தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com