Mythology: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள சிவலிங்கம் பற்றி தெரியுமா
Mythology: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள சிவலிங்கம் பற்றி தெரியுமா
Published on: March 29, 2025 at 3:45 pm
காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் மிகவும் பழமையான கோயில் ஆகும். இந்த கோவில் 1300 வருடங்களுக்கும் மேல் பழமையானதாக கருதப்படுகிறது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இந்த கோயிலில் உள்ள லிங்கத்திற்கு ஒரு வரலாறு உள்ளது அது என்னவென்றால் பார்வதி திருக்கைலாயத்தில் இருக்கும் பொழுது சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகமே இருளில் மூழ்கியது.
இதனால் சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்து உலகத்திற்கு வெளிச்சத்தை கொடுத்தார். பார்வதி செய்த தவறால் சிவபெருமான் பார்வதியை பூலோகத்திற்கு சென்று தன்னை நோக்கி தவம் இருக்கச் சொன்னார். பார்வதியும் காஞ்சிபுரத்தில் உள்ள கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் செய்து பூஜை செய்து வந்தார்.
இதையும் படிங்க இந்தியாவில் நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் : எங்கெங்கு அமைந்துள்ளன தெரியுமா?
பார்வதியின் தவத்தை உலகத்திற்கு அரிய செய்ய சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளத்தை உருவாக்கினார். பார்வதி தான் பூஜை செய்வதற்காக உருவாக்கிய மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார் உடனே சிவபெருமான் பார்வதியின் முன்னே தோன்றி பார்வதிக்கு அருள் புரிந்து இரண்டு படி நெல்லை கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமக்கோட்டத்தில் 32 அரங்கங்களை செய்ய பணிந்தார்.
பார்வதி வழிபட்ட மணல் லிங்கமே பிரித்வி லிங்கம் ஆகும். இந்த கோவிலில் மாமரம் தான் தல விருட்சமாக கருதப்படுகிறது. இங்குள்ள மா மரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பதே இக்கோவிலில் தனிச்சிறப்பாகும். காமக்கோட்டம் தான் காமாட்சியம்மன் கோவில். பார்வதி கட்டி தழுவியதால் இங்கே உள்ள சிவபெருமானுக்கு தழுவக் குழைந்தநாதர் என்றும் பெயர் உண்டாயிற்று.
இதையும் படிங்க பிரபஞ்சத்தை இயக்கும் 9 விதிகள் ; கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொன்னவை என்ன ?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com