விஜய் மேனேஜர் என்னிடம் பேரம் பேசினார்.. த.வா.க வேல் முருகன்!

Velmurugan Alleges Vijay : விஜய் மேனேஜர் என்னிடம் பேரம் பேசினார் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

Published on: May 2, 2026 at 3:47 pm

Updated on: May 2, 2026 at 3:48 pm

சென்னை, மே 2, 2026: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நடிகர் விஜய்யின் மேலாளர் ‘கத்தி’ திரைப்படம் வெளியான போது தன்னிடம் பேரம் பேசியதாக பரபரப்பான குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார். அதில் வேல்முருகன், “பெரிய தொகை நன்கொடை மற்றும் கட்சியின் நிர்வாகிகளுக்கெல்லாம் வாகனம் வாங்கித் தருவதாக அவரது (விஜய்) மேலாளர் கூறியதாக தெரிவித்துள்ளார்.

அதாவது, “கத்தி திரைப்படத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது, விஜய்யின் மேலாளர் என்னிடம் வந்து பேரம் பேசினார்” என்று வேல்முருகன் கூறினார். தொடர்ந்து வேல்முருகன், “நான் எந்த அரசியல்வாதியிடமிருந்தும் லஞ்சம், கமிஷன், கையூட்டு எதையும் ஏற்றுக்கொண்டதில்லை” என்றும் கூறினார்.

2014-ல் வெளியான ‘கத்தி’ திரைப்படம், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்தது. அந்நிறுவனம், முன்னாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் தொடர்புடையது என்ற குற்றச்சாட்டால், தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
அந்த நேரத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் பல அமைப்புகள் படத்தை தடுக்க போராட்டம் நடத்தின. இறுதியில், படத்துக்கு அனுமதி கிடைத்தாலும், அந்த விவகாரம் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மதுரையில் வெற்றி வாய்ப்பு பிரகாசம்.. முருகன் என் குலத்தெய்வம்.. சுந்தர் சி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com