நள்ளிரவில் குளியலறைக்குள் 7 அடி முதலை… அலடியடித்து ஓட்டம் பிடித்த குடும்பத்தினர்!

Crocodile Rescue: குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, வீட்டின் குளியலறைக்குள் புகுந்த 7 அடி நீள முதலை வனத்துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இயற்கை குளத்தில் விடப்பட்டது.

Published on: August 1, 2026 at 5:50 pm

ஆனந்த், ஆகஸ்ட் 1 2026: குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி வழிந்துள்ளன. வெள்ளநீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்ததால், அங்கிருந்த வனவிலங்குகளும் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அந்த வகையில், 7 அடி நீளமுள்ள முதலை ஒன்று நள்ளிரவில் ஒரு வீட்டின் குளியலறைக்குள் புகுந்து பதுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிகாலையில் குளியலறைக்குச் சென்ற குடும்பத்தினர், அங்கு முதலை பதுங்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து வெளியேறினர். இதையடுத்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதலையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த மீட்புப் பணிக்குப் பிறகு, கயிறுகள் மற்றும் பிரத்யேக மீட்பு உபகரணங்களின் உதவியுடன் 7 அடி நீள முதலை பாதுகாப்பாகப் பிடிக்கப்பட்டது. மீட்பின்போது முதலைக்கு எந்தவித காயமும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட முதலை உடல்நிலை பரிசோதனைக்குப் பிறகு, அருகிலுள்ள பாதுகாப்பான இயற்கை குளத்தில் வனத்துறையினர் விடுவித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. பருவமழை காலங்களில் நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: ஆந்திராவில் ரூ.5,640 கோடியில் பிரம்மாண்ட விமான நிலையம்.. பிரதமர் மோடி திறந்து வைத்தார்

‘அவதூறுகள் எதையும் தீர்ப்பதில்லை; வழி தவறியவர்களை நல்வழிப்படுத்துவோம்’.. பிரதமர் நரேந்திர மோடி!
PM Modi Message

‘அவதூறுகள் எதையும் தீர்ப்பதில்லை; வழி தவறியவர்களை நல்வழிப்படுத்துவோம்’.. பிரதமர் நரேந்திர மோடி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com