₹2,000க்கு அதிகமான UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்.. எவ்வளவு தெரியுமா? முழு விவரம்!

UPI money transaction: அக்டோபர் 15, 2026 முதல் ரூ.2,000-ஐ மீறும் UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4% MDR (Merchant Discount Rate) வசூலிக்கப்படும். ரூ.75,000-ஐ மீறும் பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சமாக ரூ.300 வரை மட்டுமே கட்டணம் விதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Published on: September 16, 2026 at 11:31 am

புதுடெல்லி, செப்டம்பர் 16, 2026; அக்டோபர் 15, 2026 முதல் ரூ.2,000-ஐ மீறும் UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4% MDR (Merchant Discount Rate) வசூலிக்கப்படும் என்று தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் (NPCI) அறிவித்துள்ளது. ரூ.75,000-ஐ மீறும் பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சமாக ரூ.300 வரை மட்டுமே கட்டணம் விதிக்கப்படும். இதனால், பெரும்பாலான சிறிய பரிவர்த்தனைகள் கட்டணமின்றி தொடரும் நிலையில், பெரிய பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே MDR விதிக்கப்பட உள்ளது.

NPCI வெளியிட்ட தகவலின்படி, ரூ.2,000 வரை உள்ள பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் இல்லை. உதாரணமாக, ரூ.3,000 பரிவர்த்தனைக்கு ரூ.12 MDR, ரூ.50,000 பரிவர்த்தனைக்கு ரூ.200 MDR, ரூ.1,00,000 பரிவர்த்தனைக்கு ரூ.300 MDR விதிக்கப்படும். இதன் மூலம், 95% பரிவர்த்தனைகள் கட்டணமின்றி தொடரும் என NPCI தெரிவித்துள்ளது.

பயனாளர்களுக்கிடையேயான (Person-to-Person) பரிவர்த்தனைகள் MDR-இல் இருந்து விலக்கப்பட்டுள்ளன. அதேபோல், மாதம் ரூ.1 லட்சம் வரை QR மூலம் பெறும் சிறு வணிகர்களும் MDR-இல் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள் போன்ற துறைகளில் ரூ.2,000-ஐ மீறும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 Flat charge விதிக்கப்படும். மின்சாரம், குடிநீர், எரிவாயு போன்ற பொதுப் பயன்பாடுகளுக்கும் இதே ரூ.5 Flat charge விதிக்கப்படும்.

மூலதன சந்தை பரிவர்த்தனைகள் (Mutual funds, Securities) தொடர்பாக 0.02% MDR விதிக்கப்படும்; ஆனால் அதிகபட்சமாக ரூ.300 வரை மட்டுமே வசூலிக்கப்படும். இதனால், முதலீட்டு துறையில் பரிவர்த்தனை செய்யும் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை கிடைக்கும்.

NPCI தெரிவித்ததாவது, MDR மூலம் கிடைக்கும் வருவாய் UPI வலையமைப்பின் பராமரிப்பு, பாதுகாப்பு, புதுமை மற்றும் வாடிக்கையாளர் சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும். ஆண்டுதோறும் UPI செயல்பாடுகளுக்கான செலவு சுமார் ரூ.20,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லாமல் UPI பயன்பாடு தொடரும் நிலையில், வணிகர்கள் பெரிய பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இதையும் படிங்க; ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் புதிய சி.இ.ஓ யார்? போட்டியில் முந்தும் இருவர்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com