Thol Thirumavalavan : எப்படி பார்த்தாலும், தி.மு.க.கூட்டணிதான் வெற்றி பெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Thol Thirumavalavan : எப்படி பார்த்தாலும், தி.மு.க.கூட்டணிதான் வெற்றி பெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Published on: May 2, 2026 at 3:19 pm
சென்னை, மே 2, 2026: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர் விஜய் தனியாக போட்டியிடுவதால் திமுக – அதிமுக எதிர்ப்பு வாக்குகள் பிளவுபட்டு, அது திமுக கூட்டணிக்கு சாதகமாக மாறும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய தொல். திருமாவளவன், “விஜய் தனியாக போட்டியிடுவது தேர்தல் களத்தில் புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது. மேலும் விஜய், “எதிர்ப்பு திமுக மற்றும் அதிமுக வாக்குகளைப் பிரித்து விடுகிறார்.
அதனால், அந்த வாக்குகள் ஒருங்கிணைந்து அதிமுக-பாஜக கூட்டணிக்கு செல்லாமல், திமுக கூட்டணிக்கு மறைமுகமாக ஆதரவாக மாறும்” என்றார்.
தெளிவான நிலைப்பாடு
மேலும், “விஜய் ஊடக கவனத்தை ஈர்த்தாலும், அவர் சமூக நீதி, மதச்சார்பின்மை, சாதி வன்முறை போன்ற முக்கிய பிரச்சினைகளில் தெளிவான நிலைப்பாடு எடுக்கவில்லை” எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கருத்துக் கணிப்பு முடிவுகள்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஏப்23ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது; இதில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் சில கணிப்புகள் திமுக கூட்டணி 122–145 இடங்களை வெல்லும் என கூறுகின்றன.
மேலும், சில கணிப்புகள் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 35% வாக்கு பங்குடன் மிகப்பெரிய கட்சியாக உருவாகும் வாய்ப்பையும் சுட்டிக்காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி செயலாளர்.. ஜெயஸ்ரீ ஐ.ஏ.எஸ் விருப்ப ஓய்வு.. யார் இவர்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com