தமிழ்நாட்டில் வெளிநாட்டினர் வாக்குப்பதிவு.. உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு!

TN Polls : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் வெளிநாட்டில் வாக்குப்பதிவு செய்த நிலையில், இதுதொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Published on: May 17, 2026 at 3:50 pm

புதுடெல்லி, மே 17, 2026: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெளிநாட்டவர்கள் போலியான அடையாள ஆவணங்களை பயன்படுத்தி வாக்களித்ததாக வெளிச்சம் பார்த்ததால், தேர்தல் ஆணையம் உயர் மட்ட விசாரணையை தொடங்கியுள்ளது. முன்னதாக, சென்னை மற்றும் மதுரை விமான நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்

கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும், இலங்கை, கனடா, மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள், சென்னை மற்றும் மதுரை விமான நிலையங்களில் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக, இவர்கள் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற போது, விரலில் வாக்கு மை சாயம் இருந்ததால் அதிகாரிகள் சந்தேகித்தனர்.

இந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டார்கள். தற்போது இவர்கள் எப்படி வாக்களித்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தில் 2026-இல் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தாலும், வெளிநாட்டவர்கள் பட்டியலில் எவ்வாறு இருந்தார்கள் என்பது கேள்வியாக உள்ளது.

இதையும் படிங்க : ஏழை- எளிய மக்களுக்கு நற்செய்தி.. வந்தாச்சு 200 யூனிட் இலவச மின்சாரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com