600 Cases Withdrawn: விவசாயிகள், ஆசிரியர்கள் மீது 600 வழக்குகள் ரத்து செய்யப்பட்டன; 92 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டனர் என தமிழ்நாடு அரசு தகவல்.
600 Cases Withdrawn: விவசாயிகள், ஆசிரியர்கள் மீது 600 வழக்குகள் ரத்து செய்யப்பட்டன; 92 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டனர் என தமிழ்நாடு அரசு தகவல்.

Published on: November 16, 2026 at 1:37 pm
சென்னை, நவ.16, 2026: தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டதற்காகப் பதிவு செய்யப்பட்ட 600 வழக்குகளைத் திரும்பப் பெற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
கடந்த செப்டம்பர் 2-ம் தேதி சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய ஆட்சிக் காலங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என அறிவித்திருந்தார்.
இதையடுத்து, முதலமைச்சரின் உத்தரவின்படி 600 வழக்குகள் கண்டறியப்பட்டு, உரிய சட்ட நடைமுறைகளின்படி ஆய்வு செய்யப்பட்டன. தற்போது அந்த வழக்குகளை ரத்து செய்து, அவற்றில் தொடர்புடைய 92 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை விடுவித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க : கள்ளக்குறிச்சி விவகாரம்: தலைமைச் செயலர், டிஜிபிக்கு ஆளுநர் அழைப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com