Royal Couple Mumbai Visit: மும்பைக்கு பிரிட்டன் இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் தம்பதி வருகை தரவுள்ளார்கள்.
Royal Couple Mumbai Visit: மும்பைக்கு பிரிட்டன் இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் தம்பதி வருகை தரவுள்ளார்கள்.

Published on: November 16, 2026 at 1:27 pm
லண்டன், நவ.16, 2026: பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகியோர் 2026-ம் ஆண்டுக்கான ‘எர்த்ஷாட்’ (Earthshot Prize) விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக நவம்பர் 16 முதல் 18-ம் தேதி வரை இந்தியாவின் மும்பைக்கு வருகை தருகின்றனர். இதனை கென்சிங்டன் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்துக்குத் தீர்வு காணும் புதுமையான திட்டங்களை ஊக்குவிக்கும் நோக்கில் இவ்விருதை இளவரசர் வில்லியம் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கினார். இந்த ஆண்டு விருது வழங்கும் விழா நவம்பர் 17-ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது.
இந்த விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 15 இறுதிப் போட்டியாளர்களில் இருந்து 5 வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். ஒவ்வொரு வெற்றியாளருக்கும் தலா 10 லட்சம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.12 கோடி) பரிசுத்தொகையாக வழங்கப்படும். காலநிலை மாற்றம், காற்று மாசுபாடு, கடல் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திட்டங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
மும்பை பயணத்தின்போது இளவரசர் வில்லியம் கிரிக்கெட் நிகழ்ச்சி மற்றும் மெட்ரோ ரயில் பயணத்திலும் பங்கேற்க உள்ளார். தொடர்ந்து, நவம்பர் 18-ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இருவரும் சந்தித்துப் பேச உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஆன்லைனில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. இந்திய மாணவருக்கு 30 ஆண்டுகள் சிறை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com