Gold Silver Price Fall: திருமண சீசனுக்கு முன்பே சரியும் தங்கம், வெள்ளி விலையால், முதலீட்டாளர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது.
Gold Silver Price Fall: திருமண சீசனுக்கு முன்பே சரியும் தங்கம், வெள்ளி விலையால், முதலீட்டாளர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது.

Published on: November 16, 2026 at 1:17 pm
சென்னை, நவ.16, 2026: இந்தியாவில் திருமண சீசன் தொடங்க உள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சரிவைச் சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியின் தாக்கமாக, இந்திய மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (எம்.சி.எக்ஸ்) சந்தையிலும் விலை குறைந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை சுமார் 4.6 சதவீதமும், வெள்ளியின் விலை சுமார் 5 சதவீதமும் சரிந்துள்ளன. இதன்படி, டிசம்பர் மாதத் தங்க ஒப்பந்தம் 10 கிராமுக்கு ரூ.1,36,750 ஆகவும், வெள்ளி கிலோவுக்கு ரூ.1,76,543 ஆகவும் வர்த்தகமானது.
அமெரிக்காவில் எதிர்பார்த்ததைவிட பணவீக்கம் அதிகரித்தது, அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு மற்றும் பத்திரங்களுக்கான வருவாய் அதிகரிப்பு ஆகியவை தங்கம், வெள்ளி விலை சரிவுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. மேலும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இருப்பினும், இந்தியாவில் திருமண சீசனையொட்டி தங்கத்திற்கான தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதுடன், மத்திய வங்கிகளின் தங்கக் கொள்முதலும் விலை சரிவைக் கட்டுப்படுத்த உதவும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். வரும் நாட்களில் அமெரிக்காவின் வட்டி விகித முடிவுகள் மற்றும் சர்வதேச சந்தை நிலவரங்களைப் பொறுத்து தங்கம், வெள்ளி விலையில் ஏற்ற இறக்கங்கள் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க :டிசம்பரில் ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் உயர வாய்ப்பு.. எஸ்.பி.ஐ ஆய்வறிக்கை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com