ரூ.6.8 கோடியில் புனரமைக்கப்படும் 1,000 ஆண்டுகள் பழமையான சோழீஸ்வரர் கோயில்.. பக்தர்கள் நெகிழ்ச்சி!

Choleeswarar Temple Renovation: ரூ.6.8 கோடியில் 1,000 ஆண்டுகள் பழமையான சோழீஸ்வரர் கோயில் புனரமைக்கப்படவுள்ளது.

Published on: November 16, 2026 at 2:23 pm

திருச்சி, நவ.16, 2026: திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், வி.துறையூரில் சிதிலமடைந்த நிலையில் உள்ள பழமையான அருள்மிகு சோழீஸ்வரர் கோயிலை ரூ.6.8 கோடி மதிப்பீட்டில் புனரமைக்க இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப் பணிகளுக்கு கடந்த வாரம் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

சோழர் கால கட்டிடக்கலை அம்சங்களைக் கொண்டதாகக் கருதப்படும் இக்கோயிலின் புனரமைப்புப் பணிகள் 24 மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கோயிலின் பழமையான கட்டிடக்கலை அம்சங்களைப் பாதுகாத்து, கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

கோயிலின் பெயர் மற்றும் கற்களால் அமைக்கப்பட்டுள்ள கட்டுமான முறையை அடிப்படையாகக் கொண்டு, இது சுமார் 800 முதல் 1,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என தமிழ் பேராசிரியரும் தொல்லியல் ஆர்வலருமான செல்வராஜு தெரிவித்துள்ளார். எனினும், கோயிலின் துல்லியமான காலம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

தமிழகம் முழுவதும் 64 பழமையான கோயில்களைப் புனரமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக 2025-26 நிதிநிலை அறிக்கையில் ரூ.125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதிபெற்ற ஸ்தபதிகள், சிற்பிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மூலம் பாரம்பரிய கட்டிடக்கலை அம்சங்கள் பாதுகாக்கப்படும் வகையில் பணிகள் நடைபெற உள்ளன.

இதையும் படிங்க : திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: 4,200 போலீஸார் பாதுகாப்பு!

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா.. சூரசம்ஹாரத்துக்கு 6 லட்சம் பக்தர்கள் வருவார்கள்.. அமைச்சர் ரமேஷ்!
Tiruchendur Soorasamharam 2026

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா.. சூரசம்ஹாரத்துக்கு 6 லட்சம் பக்தர்கள் வருவார்கள்.. அமைச்சர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com