திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா.. சூரசம்ஹாரத்துக்கு 6 லட்சம் பக்தர்கள் வருவார்கள்.. அமைச்சர் ரமேஷ்!

Tiruchendur Soorasamharam 2026: திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்துக்கு 6 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Published on: November 10, 2026 at 11:10 am

சென்னை, நவ.10, 2026: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு சூரசம்ஹார விழாவைக் காண சுமார் 6 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் 10ஆம் தேதி தொடங்கும் கந்த சஷ்டி விழாவில், நவம்பர் 15ஆம் தேதி சூரசம்ஹாரமும், நவம்பர் 16ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளன. முதல் ஐந்து நாட்களில் தலா ஒரு லட்சம் பக்தர்களும், சூரசம்ஹாரத்தன்று 6 லட்சம் பேரும், திருக்கல்யாணத்தன்று 2 லட்சம் பேரும் வருவார்கள் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் தெரிவித்துள்ளார்.

விரதம் இருக்கும் பக்தர்களுக்காக 1,02,673 சதுர அடி பரப்பளவில் 11 தற்காலிக தங்குமிடங்களும், 300 தற்காலிக கழிப்பறைகளும் அமைக்கப்படுகின்றன. மேலும், நாள்தோறும் 15 ஆயிரம் பேருக்கு இலவச உணவு வழங்கப்படுவதுடன், 6 லட்சம் குடிநீர் பாட்டில்கள், ஒரு லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களின் பாதுகாப்புக்காக 493 சிசிடிவி கேமராக்கள், 6 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், 10 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடங்களும், மருத்துவ முகாம்கள், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : அக்ஷய திருதியைக்கு நிகரான தினம்.. 2026ஆம் ஆண்டின் தன திரயோதசி தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com