Rajnath Singh Kashi Visit: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காசியில் வழிபாடு நடத்தினார்.
Rajnath Singh Kashi Visit: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காசியில் வழிபாடு நடத்தினார்.

Published on: October 26, 2026 at 7:05 pm
புதுடெல்லி, அக்.26, 2026: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். அக்டோபர் 24ஆம் தேதி வாரணாசிக்குச் சென்ற அவர், காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்று, மகாதேவரை வணங்கினார்.
இதனைத் தொடர்ந்து, வாரணாசியில் உள்ள சங்கட் மோச்சன் ஹனுமான் கோயில் மற்றும் கால பைரவர் கோயில்களுக்கும் ராஜ்நாத் சிங் சென்று வழிபட்டார். தனது கோயில் தரிசனம் தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்த அவர், நாட்டின் அனைத்து மக்களுக்கும் மகாதேவரின் அருள் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்தித்தார்.
#WATCH | Varanasi, Uttar Pradesh: Defence Minister Rajnath Singh offers prayers at the Kashi Vishwanath Temple. https://t.co/3zEhBHk0qN
— ANI (@ANI) October 24, 2026
(நன்றி: ஏ.என்.ஐ ட்விட்டர்)
இதற்கிடையே, இன்றைய தினம் அக்டோபர் 25ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வாரணாசிக்கு வருகை தர உள்ளார். அப்போது புதிய ஆடை உற்பத்தி தொழிற்சாலையைத் தொடங்கி வைப்பதுடன், நமோ காட் பகுதியில் நடைபெறவுள்ள இந்திய விமானப்படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார். பிரதமரின் வருகையை முன்னிட்டு வாரணாசியில் பாதுகாப்பு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா.. தஞ்சையில் கோலாகலம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com