Itlu Arjuna Release Update: அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குப் படமான ‘இட்லு அர்ஜுனா’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Itlu Arjuna Release Update: அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குப் படமான ‘இட்லு அர்ஜுனா’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published on: October 26, 2026 at 6:56 pm
ஹைதராபாத், அக். 26 2026: நடிகை அனஸ்வரா ராஜன் மற்றும் அறிமுக நடிகர் அனீஷ் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படமான ‘இட்லு அர்ஜுனா’ (Itlu Arjuna) படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மகேஷ் உப்பாலா இயக்கியுள்ள இப்படம், வரும் அக்டோபர் 30-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தயாரிப்புக் குழு வெளியீட்டை ஒத்திவைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தயாரிப்பு நிறுவனமான வாட் நெக்ஸ்ட் என்டர்டெயின்மென்ட்ஸ், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதை அறிவித்துள்ளது. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், படக்குழுவினருக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
வெங்கி குடுமுலு தயாரிக்கும் இப்படத்தை மகேஷ் உப்பாலா இயக்குகிறார். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா இப்படத்தை வழங்குகிறார். அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடிக்க, அனீஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மேலும், எஸ். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: பிரபுதேவா – சிம்ரன் மீண்டும் ஜோடி.. புதிய படத்தின் பெயர் என்ன தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com